tamilnadu

img

பள்ளி மதிய உணவில் இறந்து கிடந்த எலி!

லக்னோ:
உத்தரப்பிரதேச மாநில, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப் பட்ட மதிய உணவில் எலி இறந்துகிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம், முசாபர் நகர் மாவட்டத்திற்கு உட்பட்டது, ஹாபூர் நகராகும். இங்குஇயங்கி வரும் அரசுப் பள்ளியில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை யிலான மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு ஒவ்வொரு நாளும்ஒவ்வொரு விதமான உணவு, மாணவர்களுக்கு மதிய உணவாக சமைத்து வழங்கப்பட்டு வருகிறது. ஹபூரைச் சேர்ந்த ‘ஜன கல்யாண் சேவா சமிதி’ என்ற என்ஜிஓஅமைப்பு உணவைத் தயாரித்து வழங்கி வருகிறது.அதன்படி செவ்வாய்கிழமையன்று மதியம், மாணவர்களுக்கு பருப்பு உணவு வழங்கப்பட்ட நிலையில், அதில், எலி இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த உணவை சாப்பிட்ட மாணவர்களில் 9 பேரின் உடல் நிலைமோசமடைந்து, அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், சிலரின் உடல்நிலையில் அசௌகரியம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரி ராம்சாகர் திரிபாதி, கவனக்குறைவால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட தனியார் அமைப்பு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். உ.பி. பள்ளி ஒன்றில் ஒருவாளி தண்ணீரில் ஒரு லிட்டர் பாலை கலந்துவிநியோகித்த சம்பவம் கடந்த வாரம்தான் சர்ச்சையை ஏற்படுத்தியிருந் தது என்பது குறிப்பிடத்தக்கது.

;